flight restaurant1
செய்திகள்இந்தியா

ஹோட்டலாக மாறிய விமானம்!

Share

குஜராத் மாநிலத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்து அசத்தியுள்ளனர்.

குஜராத் மாநிலம் வதோதராவில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வடிவமைத்துள்ளனர்.

இதற்காக பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ஏர்பஸ்-320 ரக விமானம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

விமானத்தின் ஒவ்வொரு பாகமும் வதோதராவுக்கு கொண்டு வரப்பட்டு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோட்டலின் நிர்வாக இயக்குநர் முகி இது தொடர்பில் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்துக்குள் வரும் போது, நிஜ விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

இங்கு பஞ்சாபி, சைனீஸ், இத்தாலியன், மெக்சிகன், தாய், காண்டினெண்டல் உட்பட பல்வேறு வகையான உணவு வகைகள் கிடைக்கும்’ ‘இங்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு, விமானத்தில் இருப்பது போன்றே டிக்கெட் ஒன்று கொடுக்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் 106 பேர் வரை இங்கு அமர்ந்து உணவருந்தலாம்.

இங்குள்ள ஊழியர்கள் விமான பணியாளர்கள் போல உடையணிந்து பணியாற்றுகின்றனர் என்பன போன்ற விசேட அம்சம்களும் இங்கு உண்டு.

இந்த அட்டகாசமான வடிவமைப்பு பொதுமக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
body 1
இந்தியா

வீட்டாரின் ஒத்துழைப்புடன் துப்பாக்கி பிரயோகம் – சிறுமி பலி.

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

sivakarthikeyan vijay
இந்தியா

முதலமைச்சரை சந்தித்த சிவகார்த்திகேயன்.

நடிகர் சிவகார்த்திகேயன், தமிழக முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். குறித்த, சந்திப்பின்...

wedding
இந்தியா

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே திருமணம்!

இந்தியாவில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.11 இலட்சம் வருமானம் பெரும் பெண் ஒருவர், தமக்கு வாழ்க்கைத்...

vijay sad
இந்தியா

முதல்வர் விஜய்யின் பேச்சுக்கு திமுக பதிலடி !

கரூருக்கு சென்ற தமிழக முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்வில், திமுகவை குறித்து கடுமையான விமர்சனங்களினை...