10 25
இலங்கைசெய்திகள்

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

Share

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் – தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்வம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ். வடமராட்சி, வல்லிபுரம் பகுதியில் சட்டவிரோத முறையில் மணல் அகழ்ந்து கொண்டு டிப்பர் வாகனம் ஒன்று சென்றுள்ளது.

குறித்த டிப்பர் வாகனத்தைப் பருத்தித்துறை (Point Pedro) காவல்துறையினர் வல்லிபுரம் – ஆனைவிழுந்தன் வீதியில் வைத்து நிறுத்துமாறு கோரியபோது அதனை பொருட்படுத்தாமல் தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இதன்போது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி குறித்த டிப்பர் வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

மேலும், கடத்தல் காரர்கள் தப்பித்த நிலையில், டிப்பர் வாகனம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...