school
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆரம்ப பிரிவு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பம்

Share

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையிலான ஆரம்ப பிரிவு வகுப்புகள் ஆரம்பமாகி உள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைக்கு சமூகம் அளித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையான மாணவர்கள் பாடசாலை சீருடையுடனும்,சில மாணவர்கள் சாதாரண ஆடையுடனும் பாடசாலைக்கு சமூகமளித்து உள்ளனர்.

பாடசாலைக்கு செல்லும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக மாணவர்களின் உடல் வெப்பம் அளவீடு செய்யப்பட்டுள்ளதோடு, ஏனைய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன.

மேலும் வீதிப் போக்குவரத்து பிரிவு பொலிஸார் பாடசாலைகளுக்கு முன் விசேட கடமையை முன்னெடுத்து வருகின்றனர்.

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் கடந்த வியாழக்கிழமை (21) ஆம் திகதி முதல் பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.

-அதன் அடிப்படையில் 2 ஆம் கட்டமாக இன்றைய தினம் திங்கட்கிழமை (25) தரம் 1 முதல் 5 வரையான ஆரம்ப பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...