world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

Share

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் இன்று (ஏப்ரல் 17) வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், எவரேனும் நிலக்கரி ஊழல் குறித்து ஆதாரங்களுடன் தகவல் அறிந்திருந்தால் அதனைத் தாராளமாக ஆணைக்குழுவிடம் வழங்கலாம் எனக் குறிப்பிட்டார்.

நிலக்கரி கொள்வனவு மற்றும் மின்சார உற்பத்திக்காக நிலக்கரி விநியோகிக்கப்பட்ட நடைமுறைகளில் ஏதேனும் சட்டவிரோதச் செயல்கள் அல்லது நிதி முறைகேடுகள் இடம்பெற்றனவா என்பதை ஆராய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் ஒரு உயர்மட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. தசாப்த காலமாக நிலக்கரி இறக்குமதியில் நிலவியதாகச் சந்தேகிக்கப்படும் முறைகேடுகளை முழுமையாகவும் வெளிப்படையாகவும் விசாரிப்பதே இந்த ஆணைக்குழுவின் பிரதான நோக்கமாகும். இந்த ஆணைக்குழு தனது அறிக்கையை அடுத்த ஆறு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்த மட்டத்தில் இருந்ததை ஏற்றுக்கொண்ட அமைச்சர் விஜித ஹேரத், இருப்பினும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடைபெறவில்லை என்று பொறுப்புடன் தெரிவித்தார். மின்சார உற்பத்தியின் போது சில குறைபாடுகள் காணப்பட்ட போதிலும், அது அமைச்சரின் நேரடித் தொடர்பினால் ஏற்பட்ட முறைகேடு என்று எந்தவொரு தணிக்கை அறிக்கையிலும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும், பொதுமக்கள் மற்றும் தரப்பினரிடையே நிலவும் சந்தேகங்களைத் தீர்க்கவே இந்த ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் பணிகளைச் சுதந்திரமாகவும் பக்கச்சார்பின்றியும் முன்னெடுப்பதற்கு வசதியாக, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். விசாரணைகளின் போது எவ்விதத் குறுக்கீடுகளும் இருக்கக்கூடாது என்பதற்காகவே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...