15 11
இலங்கைசெய்திகள்

மக்களே அவதானம்! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

Share

மக்களே அவதானம்! மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன்படி, நேற்று (12) மாலை 4.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பதுளை மாவட்டம் – எல்ல, ஹாலிஎல, பசறை, காலி மாவட்டம் – யக்கலமுல்ல, நியாகம, இமதுவ, களுத்துறை மாவட்டம் – பேருவளை, கேகாலை மாவட்டம் – கலிகமுவ, குருநாகல் மாவட்டம் – நாரம்மல, பொல்கஹவெல, அலவ்வ, நுவரெலியா மாவட்டம் – அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டம் – கஹவத்தை, ஓபநாயக்க, பெல்மடுல்ல, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு 1ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மாவட்டம் – சீதாவக, பாதுக்க, களுத்துறை மாவட்டம் – வலல்லாவிட்ட, ஹொரண, இங்கிரிய, மத்துகம, தொடங்கொட, புலத்சிங்கள, பாலிந்தனுவர, அகலவத்தை, காலி மாவட்டம் – எல்பிட்டிய, பத்தேகம, நெலுவ, நாகொட, கம்பஹா மாவட்டம் – அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டம் – ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெஹியோவிட்ட, வரகாபொல, புலத்கொஹுபிட்டிய, கேகாலை, மாவனெல்ல, அரநாயக்க, இரத்தினபுரி மாவட்டம் – எஹலியகொட, கிரியெல்ல, அயகம, எலபாத்த, கலவான, இரத்தினபுரி, குருவிட்ட உள்ளிட்ட பகுதிகளுக்கும் 2ஆம் கட்டத்தின் கீழ் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...