cc
செய்திகள்உலகம்

சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தல்

Share

ஹைதியில் சிறுவர்கள் உள்பட 17 அமெரிக்கர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

உலகிலேயே அதிக அளவு கடத்தல் சம்பவங்கள் நடக்கும் நாடாக ன ஹைதி இருந்து வருகிறது.

ஹைதியின் அதிபர் ஜோவனல் மோயிஸ் சமீபத்தில் கூலிப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

எனினும் கடந்த சில ஆண்டுகளாக பாதுகாப்பு நடவடிக்கைகளின் பலனாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தன.

இந்நிலையில், ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வரும் அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலய ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு ஆசிரமத்துக்கு சென்றுவிட்டு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தவேலையிலேயே இக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு அதிகாரிகளுடன் பேசி வருகிறது.

இதுவரை இக்கடத்தலை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....