sumanthiran scaled
செய்திகள்இலங்கை

போராட்டத்தில் இணையுங்கள்! – எம்பி சுமந்திரன் அழைப்பு

Share

“இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியாக நடைபெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு அனைத்து மக்களும் ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“எமது கடல் வளத்தையும் நீரியல் வளத்தையும் மிக மோசமாக அழிக்கும் இழுவைப்படகுகள், 2017ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனாலும், கடற்றொழில், நீரியல் அதிகாரிகள் இந்தத் தடையை அமுல்படுத்தாத காரணத்தால் உள்ளூர், வெளிப்பிரதேச மற்றும் வெளிநாட்டு இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக எமது கடல் வளத்தை முற்றாக சூறையாடுகின்றன.

இந்தநிலை தொடருமாக இருந்தால் அடுத்த தலைமுறைக்கே கடல் வளம் இல்லாது போய்விடும்.

இந்தச் சட்டத்தை முறையாக அமுல்படுத்தக் கோரி எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான எதிர்ப்புப் பேரணி இடம்பெறும்.

இழுவைப் படகு தடைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துமாறு கடற்தொழில் நீரியல்துறை அமைச்சரைக் கோருவதே இந்தப் பேரணியின் நோக்கமாகும். அனைத்து மக்களும் இந்த எதிர்ப்புப் பேரணிக்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...