செய்திகள்
சீனாவில் பல்லுயிர் அருங்காட்சியகம் திறப்பு
பல்லுயிர் பாதுகாப்பில் சாதனைகள் நிகழ்த்தி வரும் சீனா, அதனைப் பறைசாற்றும் விதமாக அருங்காட்சியகம் ஒன்றைத் திறந்து வைத்துள்ளது.
குறித்த அருங்காட்சியகம் சீனாவின் சாதனைகளைப் பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது.
சீனாவின் யுனான் மாகாணத்தில் குறித்த பல்லுயில் விதை அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியத்தின் நுழைவாயிலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விதைகள் பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன.
மேலும் பல அரிய விதைகள் உள்ளடங்கலாக பல்வேறு தாவரங்களின் விதைகளும் அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login