இலங்கைசெய்திகள்

நிகழ்நிலை விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு

Share
18 2
Share

நிகழ்நிலை விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு

நிகழ்நிலை மூலம் விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளமையால் நிகழ்நிலை விசா வழங்கும் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“நிகழ்நிலை மூலம் விசா வழங்குவதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

எதிர்காலத்தில் எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம்.

மேலும், ஓகஸ்ட் 1ஆம் திகதி முதல் நிகழ்நிலை விசா வழங்கும் செயற்பாடுகளில் நிச்சயமற்ற தன்மை காணப்பட்டதுடன் நாட்டின் நற்பெயருக்கும் பொருளாதாரத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்நிலை விசா நடைமுறையின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் 1400 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தின் ஊடாக, 30 நாட்களுக்கு மாத்திரம் செல்லுபடியாகும் வருகை விசா மற்றும் 6 மாத கால சுற்றுலா விசா என்பன மாத்திரமே இனி வழங்கப்படும்.

கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்த 2 – 5 வருடங்களுக்கான 17 வகையான குடியுரிமை விசா வழங்கும் நடைமுறையை உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ – விசா சேவை வழங்கும் பணியை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் கடந்த 02ஆம் திகதி பிறப்பித்துள்ளது.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைத் தடுக்கும் மற்றொரு இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ரவூப் ஹக்கீம் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போதே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...