tamilni 11 scaled
ஏனையவை

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

Share

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

நாட்டிலுள்ள பதினொரு பாடசாலைகளை இன்று (18ஆம் திகதி) முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அனுராதபுரம்(Anuradhapura)- மிஹிந்தலை(Mihintale) மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.

எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெளியூர்களில் இருந்து விசேட பாதுகாப்பு கடமைகளுக்காக வரும் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் தேசிய பொசன் விழாக் குழுவினர் மற்றும் அனுராதபுர சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் திலின ஹேவாபத்திரன ஆகியோர் வடமத்திய மாகாண கல்வி அமைச்சின் கோரிக்கைக்கு அமைய அந்தப் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...