tamilni 12 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

Share

நாடளாவிய ரீதியில் மதுபான சாலைகளுக்கு பூட்டு

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானங்களின் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித வலயங்களில் இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை மதுபானம் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த தகவல்களை கலால் ஆணையாளர் நாயகம் (Excise Department of Sri Lanka) எம். ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தம்புள்ளை (Dambulla) மற்றும் திஸ்ஸமஹாராம நகர சபைக்குட்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட பொசன் பண்டிகை வலயங்களில் 21 வெள்ளிக்கிழமை மற்றும் 22 சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மதுபான சாலைகள் மூடப்படும் என எம். ஜே. குணசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மத்திய நுவரகம் பலாத்த , கிழக்கு நுவரகம் பலாத்த மற்றும் மிஹிந்தலை ஆகிய பிரதேச செயலகங்கள் உட்பட அனுராதபுரம் புனித நகரை உள்ளடக்கிய பகுதிகளில் நேற்று (18.06.2024) முதல் 24 ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படும் பொசன் வாரத்தில் ஏழு நாட்களுக்கும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கலால் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் ஆணையாளர் நாயகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...