niru 1 scaled
செய்திகள்இலங்கை

சர்ச்சையில் சிக்கியுள்ள நிருபமா ராஜபக்ச! – சுயாதீன விசாரணைக்கு கோரிக்கை

Share

பண்டோரா ஆவணங்களில் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து, சுயாதீன விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டநேஷனல் இலங்கை நிறுவனம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

பண்டோரா ஆவணத்தில் வௌிக்கொணரப்பட்ட தகவல்கள் தொடர்பாக இலங்கை சுயாதீன விசாரணையை உடனடியாக நடத்த வேண்டும் என அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பண்டோரா வௌிப்படுத்திய நிதி கொடுக்கல் வாங்கல்கள் இலங்கையின் பொது உடைமைகள் தவறாக பயன்படுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்ட பணமா என்பது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த நிறுவனம் கோரியுள்ளது.

மேலும், குறித்த குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் குறித்து நடத்தப்படும் விசாரணைக்கு வெளியக அழுத்தங்கள் இல்லாது, விசாரணைகளை நடத்த இடமளிக்குமாறும் அந்த நிறுவனம் கோரியுள்ளது.

இதேவேளை, கருப்பு பணம் மூலம் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ஆவணங்களை பண்டோரா ஆவணம் வெளியிட்டுள்ளது.

இதில், இலங்கையின் முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69244e1b9b269
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை கடற்கரையில் அனுமதியற்ற கட்டுமானம்: விகாராதிபதி உட்பட சிலருக்கு நீதிமன்ற அழைப்பாணை!

திருகோணமலை கோட்டை வீதியின் கடற்கரையோரமாக அனுமதியற்ற கட்டுமானம் ஒன்றை கடந்த நவம்பர் 15 ஆம் திகதி...

images 1 2
செய்திகள்இலங்கை

பிரபாகரனின் 71வது பிறந்தநாள்: வல்வெட்டித்துறையில் வெகு விமர்சையாகக் கொண்டாட்டம்!

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 71வது பிறந்தநாள் இன்றைய தினம் (நவம்பர் 26) யாழ்ப்பாணத்தில்...

images 8
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டின் வேலையின்மை விகிதம் 3.8% ஆகக் குறைந்தது: 365,951 பேர் வேலையில்லாமல் உள்ளனர் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

நாட்டில் தற்போது 365,951 பேர் வேலையில்லாமல் இருப்பதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (நவம்பர் 26)...