app
செய்திகள்உலகம்

பழிக்குப் பழி தீர்த்தது தலிபான்

Share

ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடாத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு பழி தீர்க்கும் வகையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் நேற்றுமுன்தினம் மாலை தலிபான் ஊடகப் பேச்சாளரின், தாயாரின் நினைவேந்தல் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது, குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டது.

தாக்குதலில் 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகினார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குண்டுத் தாக்குதலுக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. சில வாரங்களாக தலிபான்களை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்த தாக்குதலையும் ஐ.எஸ் பயங்கரவாதிகளே நடத்தியிருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

குண்டுத் தாக்குதலிற்கு பதிலடி வழங்கும் நோக்குடன், ஐ.எஸ். பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக விளங்கும் காபூலின் புறநகர் பகுதிக்குள் தலிபான்கள் அதிராடியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்புக்கும் இடையே கடுமையான தாக்குதல் இடம்பெற்றதாக உள்ளூர்வாசிகள் குறிப்பிடுகின்றனர்.

இத் தாக்குதலில் ஐ.எஸ் துருப்புக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

உயிரிழப்பு மற்றும் சேத விபரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை வெளிவரவில்லை.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...