24 666124ee0aaf5
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்

Share

கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள ஊடகவியலாளர்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மோதரை பகுதியில் கடற்கரையில் நேற்று (5 ஆம் திகதி) சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்தவர் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த இந்துனில் ஜயவர்தன என்ற ஊடகவியலாளர் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல்போயுள்ளதுடன், இது தொடர்பில் பிலியந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சடலம் மோதரை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணத்திற்கான காரணம், உயிரிழந்த விதம்தொடர்பில் கண்டறிய பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் மீதான பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என மோதரை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...