24 6647340f0217e
இலங்கைஉலகம்செய்திகள்

பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்றிற்கு நெருக்கடி

Share

பிரித்தானியாவில் இலங்கை குடும்பமொன்றிற்கு நெருக்கடி

பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை குடும்பமொன்றின் தந்தை மற்றும் மகன் நாட்டில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டில் வசிக்க முடியாதெனவும் Home Office அறிவித்திருந்த சம்பவம் தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

இலங்கையை சேர்ந்த தாய், தந்தை மற்றும் பத்து வயது மகனை கொண்ட குடும்பத்திற்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு காலப்பகுதியில் தந்தை இத்தாலியிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்துள்ளார். அவர் இலங்கையராக இருந்தாலும் கூட இத்தாலிய பிரஜாவுரிமையும் கொண்டவர். அவர் பிரித்தானியாவிற்கு வந்த நிலையில் அங்கு வேலை செய்து வந்துள்ளார். அத்துடன் தனது மனைவி மற்றும் மகனையும் பிரித்தானியாவிற்கு அழைத்துள்ளார்.

மகன் இத்தாலியில் பிறந்தவரென்பதால் இத்தாலிய குடியுரிமை கொண்டவர். மனைவி இத்தாலியில் வசிக்கக்கூடிய குடியேற்ற விசா (Immigration Visa) கொண்டவர். எனவே மனைவி பிரித்தானியா வர வேண்டுமாக இருந்தால் விசா பெற்றுக் கொண்டே வரவேண்டியிருக்கும். அவ்வாறே அவர் வந்துள்ள நிலையில் குடும்ப விசா பெற்றுக் கொள்வதற்காக Home Officeஇல் விண்ணப்பித்துள்ளனர்.

குறித்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் Home Office அறிவித்துள்ளது. இந்த குடும்பத்தை பார்த்தால் நேர்மையாக தெரியவில்லை என்பதால் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தந்தையும் மகனும் பிரித்தானியாவில் வசிக்க முடியுமெனவும், தாய் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் குறித்த குடும்பத்தினரால் 2022 ஜுலை மாதத்தில் அங்கிருக்கும் குடியேற்ற நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்படுகிறது. வழக்கின் முதலாவது அமர்வில் நீதிமன்றத்தால் இது நேர்மையான குடும்பம் தான் இவர்கள் பிரித்தானியாவில் வாழ்வதற்கான தகுதி இருக்கிறது.

மிகமுக்கியமாக மனைவி பிரித்தானியாவில் வசிக்க முடியும், எந்தவித பிரச்சினையும் இல்லை ஒரே குடும்பமாக வசிக்கலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் Home Office போதியளவு ஆதாரங்கள் இல்லை, நீங்கள் ஒரே குடும்பம் என்பதை எம்மால் நம்ப முடியவில்லை எனவே நாட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என அறிவித்துள்ளது.

அதன்பிறகு 2023ஆம் ஆண்டு மே மாதம் Home Office இல் இருந்து மறுபடியும் கடிதமொன்று வருகிறது. அந்த கடிதத்தில், மகனுக்கு Pre Settle Statusஐ நாம் அனுமதித்துள்ளோம். அவர் பிரித்தானியாவில் வசிக்கவும் வேலை செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் 2023ஆம் ஆண்டிலேயும் மனைவிக்கான விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது Home Office.

இந்த இழுபறி நிலை தொடர்ந்த நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி மறுபடியும் Home Officeஇல் இருந்து கடிதமொன்று வந்துள்ளது, நீங்கள் ஒரே குடும்பம் என்பதை எம்மால் நம்ப முடியவில்லை, அதற்கான போதியளவு ஆதாரங்கள் இல்லை, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் திடீரென கடிதமொன்று வந்துள்ளது, தங்களுடைய விண்ணப்பத்தை அனுமதிப்பதாக. இந்த சம்பவம் தொடர்பில் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Share
தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...