இலங்கை
சிகரெட்டுக்கான வரி அதிகரிப்பு!
நாட்டில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்றமையால் அரச வருமானத்தை உயர்த்துவதற்காக சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்படி ஒரு சிகரெட்டின் விலையை 25 ரூபாவுக்கு மேலாக சிகரெட்டுக்கான விலை அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 வீதமானோர் சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி 31 சதவீதமான ஆண்கள் இன்னும் புகைபிடிப்பவர்களாக இருக்கின்றனர் எனவும் 26 சதவீதமானவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் 43 சதவீதமானவர்கள் புகைப்பிடிக்காதவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது சிகரெட் விலை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு 59.1 வீதமானவர்கள் 25 ரூபாவுக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login