இலங்கை
ஊரடங்குச் சட்டம் நீக்கப்படுமா? – 30ம் திகதி இறுதித் தீர்மானம்
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒக்ரோபர் முதலாம் திகதி திறப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதன்போது கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இது தொடர்பான தீர்மானம் இம்மாதம் 30 ஆம் திகதி எடுக்கப்படும்.
சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்கெல இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீக்கும் போது மக்கள் முறையான சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா பரவலை வெற்றிகரமாக ஒழிக்க முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமையை அவதானிக்கும் கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் பெருமளவு தடுப்பூசி வழங்கிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதல் 10 நாடுகளுள் இடம்பிடித்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login