Capture 42
இலங்கைசெய்திகள்

திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது

Share

திலீபனுக்கு சுடரேற்றல்! – கஜேந்திரன் எம்.பி. கைது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் சுடரேற்ற முற்பட்ட வேளை, சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் நினைவேந்தலை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுத்திருந்தனர்.

திலீபன் நினைவுத் தூபியை சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் நினைவேந்தலை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் அவரை பொலிஸார் கைதும் செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது அவர் நீதிமன்ற தடை உத்தரவு இல்லாமல் இறந்தவர்களை நினைவுகூரும் எமது உரிமையை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எவரையும் கைதுசெய்யும் வகையில் இந்தப் பொலிஸ் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

selvara

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
manokanesan
இலங்கை

அரசை வீட்டிற்கு அனுப்புவோம் – மனோ கணேசன் சூளுரை.

“நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் வகையில் அரசு செயற்படக் கூடாது எனவும் 2029ஆம் ஆண்டு...

thadampuralvu
இலங்கை

மீண்டும் தடம் புரண்டது 1164 இலக்க தொடருந்து.

சற்றுமுன்னர் கொழும்பு- கோட்டை தொடருந்து நிலையத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டுள்ளதாள், தொடருந்து நிலையத்தின் இரண்டு மேடைகளின்...

train
இலங்கை

புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.

நேற்று மாலை, கொழும்பு, பம்பலப்பிட்டி தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொடரூந்தில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக...

dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...