கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளை எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்தில் ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உலகின் மிகப் பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர்களில் ஒருவரான இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி ஏற்றுமதியை இடைநிறுத்தியிருந்தது. உள்நாட்டில் தடுப்பூசிகளுக்கு ஏற்பட்ட ஆகக்கூடுதலான கிராக்கியை கருத்தில்கொண்டு ஏற்றுமதியை தற்காலிகமாக இடைநிறுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்தது.
Quad நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதமளவில் இந்தியா 300 மில்லியன் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்தியா 76 நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது. இதில் பெரும்பாலானவை Oxford-AstraZeneca மற்றும் Covishield தடுப்பூசிகள் ஆகும்.
Leave a comment