vaddu
இலங்கைசெய்திகள்

வட்டுக்கோட்டையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில்

Share

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  தாக்குதல் சம்பவத்தில், தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்.வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது  தாக்குதல் நடத்தியுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சந்தேகநபர்கள் இருவரை கைத செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...

tax us
இலங்கை

அமெரிக்கா வழங்க போகும் வரப்பிரசாதம்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான அமெரிக்காவின் வரிச்சலுகைகள் தொடர்பாக எதிர்காலத்தில் அமெரிக்காவிடமிருந்து...