Protest 1 1 650x37599 1
இலங்கைசெய்திகள்

மதுபானசாலைகள் திறப்பு! – கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Share

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மதுபான நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஐக்கிய சுயதொழில் வர்த்தக சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இப் போராட்டத்தில் இருபது பேர் வரை இணைந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

பொதுமக்கள் கடும் கஷ்ட நிலையில் உள்ள இந்த நேரத்தில், மதுபான நிலையங்கள் அத்தியாவசிய சேவையா?

நடைபாதை வர்த்தகர்கள் போன்றோர் தவிக்கும் நிலையில் மதுபானசாலைகள் திறந்தமை கண்டிக்கத்தக்கது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு வந்த பொலிஸார் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க முடியாது என அறிவித்த நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது கோஷங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரில் இருவரை பொலிஸார் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைதுசெய்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...