கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் பரவலாக தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை துரிதகதியில் இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெற்றுக் கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கள உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த விடயம் தெரிய வந்துள்ளது என உள்நாட்டலுல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை தடுப்பூசியைப் பெறாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிகமானோர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர்.
அதன்படி யாழ்.மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டோரில் 21 ஆயிரம் பேரும் கொழும்பு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 900 பேரும் கண்டி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேரும் இதுவரை கொரோனாத் தடுப்பூசி பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை , புத்தளம் ஆகிய மாவட்டங்களில் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் பரவும் பொய்யான விடயங்களை நம்பி சிலர் தடுப்பூசியை நிராகரிக்கின்றனர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
Leave a comment