ஈழத்தின் பிரபல மிருதங்க, தபேலா வாத்திய கலைஞர் சதா வேல்மாறன் யாழ்.போதனா மருத்துவமனையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்றின் அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் ஒலிப்பதிவாகிய அதிகமான பாடல்கள் மற்றும் பெருமளவான பக்திப் பாடல்கள் ஆகியவற்றுக்கு அவரது அணி இசையமைத்துள்ளது.
யாழ்.மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில் இசையரங்குகளையும் ஆலய விழாக்களையும் அலங்கரித்த கலைஞனாக சதா வேல்மாறன் விளங்குகிறார்.
நூற்றுக்கணக்கான மாணவர்களையும் மிருதங்க, தபேலாக் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய இவர், பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரால் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டவருமாவார்.
அவரின் திடீர் இழப்பு தொடர்பில் சக கலைஞர்கள் மற்றும் பல்துறை சார்ந்தோர் இவருக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
Leave a comment