உலகம்
கனடாவுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா
கனடாவுக்கான விசா சேவையை மீண்டும் தொடங்கியது இந்தியா
கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது.
கனடாவின் சீக்கிய பிரிவினைவாத அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கடந்த ஜூன் மாதம் 18ம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் இரு நாடுகளுக்கு இடையில் உறவு விரிசல் ஏற்பட்டது. அத்துடன் இரு நாடுகளும் தங்களது தூதரக அதிகாரிகளை உடனடியாக திரும்ப பெற்றுக் கொண்டனர்.
மேலும் கனடாவின் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்த இந்தியா, கனடாவிற்கான விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், கனடா நாட்டிற்கான விசா சேவையை இந்தியா மீண்டும் வழங்க தொடங்கியுள்ளது.
இதன்மூலம் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கான விசா சேவைகள் மீண்டும் வழங்கப்பட தொடங்கியுள்ளது.
வணிகம், மருத்துவம், உள்ளிட்டவை தொடர்பான விசா வழங்கும் சேவைகளும் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.