ஆன்மீகம்
செவ்வாய்க்கிழமை விரதமும் – அற்புத பலன்களும்….


முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. தொடர்ச்சியாக 9 செவ்வாய்கிழமைகள் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டுவர துன்பங்கள் நீங்கி அற்புத பலன்கள் கிடைக்கும்.
ஜாதகத்தில், செவ்வாயின் பலத்தை பொறுத்தே நீதிபதிகள், ராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொறியியல் வல்லுனர்கள், அரசியல் தலைவர்களுக்குரிய செல்வாக்கு அமையும்.
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்கள், வம்பு சண்டைக்குப் போக மாட்டார்கள். வந்த சண்டையை விடவும் மாட்டார்கள். இக்கிழமையில் பிறந்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று புராணங்கள் கூறுகின்றன.
ரத்தத்திற்கும் செவ்வாயே அதிகாரி. ரத்த ஓட்டம் ஆரோக்கியத்திற்கு அடிப்படையாக உள்ளது. செவ்வாயை வழிபட்டால் ரத்த அழுத்தம், உஷ்ணம், கோபத்தில் இருந்து விடுதலை பெறலாம். செவ்வாய் கிழமைக்கு என்று ஒரு வேகம் உண்டு.