கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர்.
விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர்.
விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது.
பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கதாகும்.
#Science
Leave a comment