விண்வெளியிலும் அமெரிக்காவின் ஆதிக்கம்!

us

லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் நடைபெற்ற பிரம்மாண்ட வானவேடிக்கை காட்சிகளை சர்வதேச விண்வெளி நிலையம் மூலம் நாசா பதிவு செய்து வெளியிட்டுள்ளது.
குறித்த கொண்டாட்டமானது அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்திற்க்கானதாக அமைந்திருந்தது.

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் உயரத்தில் சுற்றிவரும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்களினை வெளியிட்டுள்ளன.
குறித்த ஒளிப்படத்தை உத்தியோகபூர்வ சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள நாசா, “அமெரிக்காவின் 250 ஆண்டுகள் சுதந்திரக் கொண்டாட்டம் விண்வெளியிலிருந்தும் தென்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளது.

நாசாவினால் வெளியிட்ட இந்த அரிய காட்சியை, அமெரிக்க விசுவாசிகள் பலரும் தமது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Exit mobile version