huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

Share

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக, ஏடன் வளைகுடாவில் தங்கள் பயணப் பாதையை மாற்றி தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கிச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆசியாவில் இருந்து வெறுமனே திரும்பிய இந்த தாங்கிகள், பப் எல்-மந்தேப் நீரிணை வழியாகச் செங்கடலைக் கடப்பதற்குப் பதிலாக, தெற்கு ஆப்பிரிக்காவை நோக்கி அணிவகுத்துச் சென்றுள்ளதாக எல்.எஸ்.இ.ஜி மற்றும் மரைன் டிராபிக் ஏ.ஐ.எஸ் (AIS) கப்பல் கண்காணிப்புத் தகவல்கள் கூறியுள்ளன.

யேமனின் ஈரான் ஆதரவு ஹூதி அமைப்பினர், சவூதி அரேபியாவின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்ததைத் தொடர்ந்து, செங்கடலில் வணிகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன்,
சவூதி கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்கள் மீதான முற்றுகைக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹூதி இயக்கம் கூறியுள்ளது.

இதனால் இந்தப் பிராந்தியத்திலான புதிய பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...

d n
உலகம்

இஸ்ரேல் பிரதமரால் நிராகரிக்கப்பட்டது அமெரிக்க அதிபரின் திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக...

feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...