donald trump volodymyr zelensky
உலகம்

மூடிய அறையில் இருநாட்டு தலைவர்கள் – அதே இடத்திற்கு பிரசன்னமான முக்கிய நபர்.

Share

வெள்ளை மாளிகையில், யுக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்துள்ளார்.

குறித்த, சந்திப்பு மிகவும் சிறப்பானதாக அமைந்ததாக ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரண்டு தலைவர்களுக்கும் இடையே முன்னர் சுமுகமாக இல்லாதிருந்த உறவு, அண்மைய மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளது என்பதை இந்தச் சந்திப்பு வெளிப்படுத்தியுள்ளது.

யுக்ரைனில் பேட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளை உற்பத்தி செய்வதற்கான உரிமங்கள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்தும், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளை மீண்டும் தீவிரப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தச் சந்திப்பு ஊடகங்களுக்கு அனுமதி இல்லாமல் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடைபெற்றதுடன்,
அதே நாளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

செனட்டர் லிண்ட்சே கிரஹாமின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா வருகை தந்துள்ள ஸெலென்ஸ்கி, யுக்ரைன் மக்களின் உயிரைப் பாதுகாக்கவும் அமைதியை அடையவும் அமெரிக்கா வழங்கும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி பாராட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
சமூக ஊடகங்களினை
உலகம்

சமூக ஊடகங்களினை கட்டுப்படுத்த அமெரிக்க மக்கள் ஆதரவு!

அமெரிக்க மக்களில் பெரும்பான்மையானவர்கள், சமூக ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் கடுமையான விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு...

d n
உலகம்

இஸ்ரேல் பிரதமரால் நிராகரிக்கப்பட்டது அமெரிக்க அதிபரின் திட்டம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் முன்வைக்கப்பட்ட காசாவுக்கான 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துள்ளதாக...

feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...