பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

Drug

 

போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

அண்மையில், தலைநகர் பெர்லினில் அமைந்துள்ள போதைக்கு அடிமையானோர் மறுவாழ்வு மையம் ஒன்றில் பேசிய ஃபெடரல் போதைத் தடுப்பு ஆணையரான ஹெண்ட்ரிக் (Hendrik Streeck), ஜேர்மனியில் போதைப்பொருட்களால் பலியானவர்களின் புள்ளிவிவரங்களையும் வெளியிட்டார்.

இந்த விடயமானது தன்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக தெரிவித்த அவர், ஆண்டுதோறும் இப்படி போதையால் பலியாவோர் எண்ணிக்கை குறித்து அறிவிப்பது ஒரு சடங்கு போல் ஆகிவிட்டதை எண்ணி வருத்தமடைந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில், பலியானவர்களின் எண்ணிக்கையானது 2,150 என்ற உயர்ந்த எண்ணிக்கையை பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டில் 2,137 பேர் போதைப்பழக்கத்தால் பலியாகியுள்ளதுடன் அதிகபட்சமாக, 2023ஆம் ஆண்டு 2,227 பேர் பலியாகியுள்ளார்கள்.

இப்படி போதையால் உயிரிழந்தவர்களில் நான்கில் ஒருவர், அதாவது 528 பேர் 30 வயதுக்குக் கீழுள்ளவர்கள், இது 2021ஆம் ஆண்டைவிட 53 சதவிகிதம் அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.

போதையால் உயிரிழந்தவர்களில் 106 பேர் 20 வயதுக்குக் கீழுள்ளவர்கள், எனும் அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

 

Exit mobile version