சவுதி அரேபியாவின் அபா சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ள பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் மேலும் பதற்ற நிலை தொடர்கிறது.
முன்னதாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள சனா விமான நிலையம் மீதும் தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
சனா சர்வதேச விமான நிலையத்தின் மீதான தாக்குதலானது, ஒரு ஈரானிய விமானம் தரையிறங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ஏமனில் உள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கம் முன்னதாகத் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது .
அபாவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் குறித்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அதிகாரப்பூர்வமாக பல தகவல்களினை கூறியுள்ளனர்.
அதில், ஏமனில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தைத் தாக்கிய சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலாக, நேற்றைய நாள் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகவும், யேமன் எல்லைக்கு அருகில் உள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகராகவும் அபா பகுதியானது விளங்கும் நிலையில், இத்தாக்குதல் அங்கு பெரும் பரபரப்பையும் பதற்றத்தினையும் தோற்றுவித்துள்ளது.