சாதி மத பேதமின்றி தமிழர் என்கிற ஒரு குடையின் கீழ் சமதர்ம சமுதாயம் இணைந்து உவப்போடு கொண்டாடும் திருநாளே இந்த பொங்கல் திருநாள்.
பாரம்பரியமான கலை, கலாச்சாரங்கள் மருவி விடாமல் இன்றும் இந்த பொங்கல் திருநாளில் கொண்டாடுகிறோம்.
சூரியன் பயணம் செய்வதுபோல் தெரிவதற்கு பூமியின் சுழற்சியே காரணம் என்று விஞ்ஞானம் சொல்லுவதை வெகு காலத்திற்கு முன்னரே முற்றும் துறந்தவர்கள் கூறுயுள்ளார்கள்.
சாதி மத பேதங்களைக் கடந்து இயற்கைக்கு நன்றி நவிலும் நாளாயிருக்கும் இந்த பொங்கல் திருநாளில் சூரியனைக் கண்டால் விலகும் பனிபோல் துன்பங்களும் துயரங்களும் இன பேதங்களும் விலகட்டும். வாழ்வில் ஒளிபிறக்கட்டும்.
#SrilankaNews
Leave a comment