என் மனைவிக்கு சமைக்குத் தெரியாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் தெரிவித்துள்ளார்.
இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக், இலங்கை பிரிமியர் லீக் டி.20 தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், நட்சத்திர ஹொட்டலில் நடந்த நிகழ்ச்சியில் சோயிப் மாலிக் மற்றும் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் கலந்துகொண்டு உரையாடினர்.
அப்போது பல்வேறுபட்ட சுவாரஸ்யம் நிறைந்த வினாக்கள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளிக்கையில், எனது மனைவி சானியாவுக்கு சமைக்க தெரியாது. வெளியில் இருந்து ஆர்டர் செய்துதான் உணவை வாங்குவார் எனக் கூறியுள்ளார்.
#SportsNews
Leave a comment