ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 16-ந்திகதி பெங்களூருவில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
போட்டியில் விளையாடும் 10 அணிகளும் தக்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.பி.எல். உரிமையாளர்களிடம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
ஒவ்வொரு அணியும் வீரர்களுக்கு ஒதுக்கும் தொகை ரூ.90 கோடியில் இருந்து ரூ.95 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த முறையை விட ரூ.5 கோடி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பெரும்பாலான ஐ.பி.எல். உரிமையாளர்கள் 15 முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டு எஞ்சிய வீரர்களை ஏலத்தில் விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#IPL #Cricket
Leave a comment