BBL டி20 கிரிக்கெட் தொடரின் 16 ஆவது தொடர், இந்தியாவின் சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.
வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு வெளிநாட்டு கிரிக்கெட் லீக் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சசை நடத்துகின்றன.
இந்த முக்கிய அறிவிப்பை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இன்று கூட்டாக வெளியிட்டனர்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான விளையாட்டு மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியை சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் கிரிக்கெட் மீதுள்ள அபாரமான ஆர்வம் மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உள்ள பெரும் ஆதரவைக் கருத்தில் கொண்டே சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

