நட்சத்திர கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ், தனது 25ஆவது வயதில் காலமானார்.
தென்னாப்பிரிக்காவினை சேர்ந்த இந்த வீரரின் மறைவானது கால்பந்து ரசிகர்களை மாத்திரம் அல்லாமல் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடப்பு உலகக் கிண்ண தொடரில் கால்பந்து , தென்னாப்பிரிக்க அணிக்காக அனைத்து குழு நிலை போட்டிகளிலும் விளையாடிய அவர், அணியின் வரலாற்று வெற்றிகளில் முக்கிய ஒரு அங்கமாகவும் இருந்துள்ளார்.
இவரது மறைவு குறித்து தென்னாப்பிரிக்காவின் விளையாட்டுத்துறை அமைச்சர் கெய்டன் மெக்கென்சி கூறுகையில், “தென்னாப்பிரிக்க கால்பந்து ஒரு சிறந்த திறமையான வீரரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
அத்துடன், அவருடைய மரணம் குறித்து ஊடகங்கள் யூகங்களை வெளியிட வேண்டாம் எனவும், குடும்பத்தாரின் தனிப்பட்ட உணர்வுகளை மதிக்க வேண்டும் என்வும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், எடம்ஸின் மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

