விஜய் அரசியலுக்கு வருவாரா? ஆகஸ்ட் 5 -ல் அடுத்த கூட்டம்!
காணொலிகள்சினிமா

லாபம் சம்பாதித்து விட்டு குறைகூறுவது நன்றி மறக்கும் அநாகரிக செயல்! – தளபதிக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம்

Share

பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளது வசூலை குவித்து வருகிறது. லாபம் சம்பாதிக்கும்
திரையரங்க உரிமையாளர்கள் விமர்சனம் செய்வது செய்வது நன்றி மறக்கும் செயல்.

விஜய் பற்றியும் பீஸ்ட் திரைப்படம் பற்றியும் சில திரையரங்க உரிமையாளர்கள் பொய் கூறி வருகின்றனர். இந்த எதிர்மறை விமர்சனமே பீஸ்ட் பெரிய லாபம் தான் என்பதை காட்டுகிறது. – இவ்வாறு தெரிவித்துள்ளார்  கந்தசாமி ஆர்ட்ஸ் சென்டர் கே ராஜமன்னார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

KGF2 மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை. அதே சமயம் பீஸ்ட் மிகப்பெரிய வசூல் செய்துள்ளது என்பதும் உண்மையே. அதையும் யாராலும் மறுக்க முடியாது.

2022ல் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படம் பீஸ்ட் என்பதே நிதர்சனமான உண்மை, பீஸ்ட் படத்தை திரையிட்ட அனைத்து திரையரங்குகளுமே பெரிய லாபம் அடைந்துள்ளனர்.

கொரோனா காலத்தில் அனைத்து திரையரங்குகளும் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும்,மாஸ்டர் படம் மூலம் திரையரங்குகளுக்கு வாழ்வு தந்தவர் விஜய்.

அன்று அவரை புகழ்ந்த திரையரங்க உரிமையாளர்கள் இன்று உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே பீஸ்ட் படம் பற்றி எதிர்மறை கருத்துக்களை பரப்புகின்றனர். இது கண்டிக்கத்தக்க விடயம்.

சில படங்களின் சில குறைகள் காணப்பட தன செய்யும். எல்லா படங்களையும், நேர்த்தியாகவும் வெற்றிப்படமாகவும் எந்த நடிகராலும் எப்போதும் கொடுக்க முடியாது.

படங்களை பற்றி, அவர்கள் ரசிகர்கள் விமர்சனம் செய்யலாம். ஆனால் அந்த நடிகரால் லாபம் சம்பாதிக்கும்
திரையரங்க உரிமையாளர்கள் விமர்சனம் செய்வது செய்வது நன்றி மறக்கும் செயல். – என்றார்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 1 3
சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்:  விஜய் சேதுபதியின் உருவப்படத்தைச் செருப்பால் அடித்து எதிர்ப்பு!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராகப் பல ஆண்டுகளாகக் கலாச்சார சீரழிவு எனக் கூறிப் பல்வேறு தரப்பினர்...

ajith111125 1
சினிமா

சென்னையில் நடிகர் அஜித்குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புரளி என உறுதி – மிரட்டல் விடுத்தவர் குறித்துக் காவல்துறையினர் விசாரணை!

இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள்...

Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...

24 66a7b7baee286 md
சினிமா

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம்

சமையல் யூடியூப் பக்கங்களில் வித்தியாசமான வில்லேஜ் குக்கிங் குழுவினர் வருமானம் வயிறு இருக்கும் வரை பசி...