பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ஜிபி முத்துவை கமல்ஹாசன் கலாய்க்கும் காட்சியின் வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜிபி முத்துவிடம் ஆதாம் குறித்து கூறி கமல்ஹாசன் கலாய்த்தார்.
இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவில் அதில் ஜிபி முத்துவை ’கொஞ்சம் எழுந்திருங்கள், உங்களிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்’ என்று கமல்ஹாசன் கூறுகிறார்.
அப்போது பாதாம் பருப்பை சாப்பிட்டு கொண்டிருந்த ஜிபி முத்து ’பாதாம்’ என்று கூற அதற்கு கமல்ஹாசன், ‘பாதாம் தெரியுது, ஆதாம் தெரியவில்லையா? அங்கே ஆதாம் எவ்வளவு வருத்தப்படுகிறார் தெரியுமா? என்று கூற அதற்கு அப்பாவியாக ஜிபி முத்து, ‘ஆதாமா, அவர் எங்கே இருக்கிறார்? என கேட்க மற்ற சக போட்டியாளர்கள் சிரிக்கின்றனர்.
இந்தவீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
#Kamalahaasan #Gpmuthu
1 Comment