1777281 renuka
விளையாட்டு

பெண்கள் ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி! 65 ரன்னில் வென்றது இந்தியா

Share

வங்காளதேசத்தில் நடைபெற்று வரும் 8-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. இதில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார்.

இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது.

இன்றைய போட்டியின் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்தாகும்.

#Cricket #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 45
செய்திகள்விளையாட்டு

சிஎஸ்கே ரசிகர்களுக்கு நிம்மதி: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி பங்கேற்பது குறித்து நிர்வாகம் விளக்கம்

ஐபிஎல் 2026 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மிக முக்கியமான...

Untitled 18
விளையாட்டுசெய்திகள்

சாம்பியன்ஸ் லீக் தொடரிலிருந்து வெளியேறிய அத்லெடிகோ மாட்ரிட்: பயிற்சியாளர் பதவியிலிருந்து சிமியோனி விலகுகிறாரா?

ஐரோப்பிய கால்பந்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த சாம்பியன்ஸ் லீக் அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்தின்...

Untitled
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி!

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடரின் 44ஆவது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை...

world 140
செய்திகள்விளையாட்டு

உசைன் போல்ட்டின் சாதனையை முறியடித்த இளம் வீரர்: தடகள உலகில் புதிய வரலாறு படைத்தார் கௌட் கௌட்!

ஆஸ்திரேலிய தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜாம்பவான் உசைன் போல்ட்டின் நீண்டகால...