‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் ‘தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக’ அதிவிசேட வர்த்தமானி மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளின் தாக்கம். மொத்தம் 22 நிர்வாக மாவட்டங்கள் இந்தப் பிரிவின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன.
2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவிப்பு, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அரசாங்க நிவாரணம், மீள்குடியேற்றம் மற்றும் இழப்பீட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்கு உதவும்.

