8 39
ஏனையவை

மூன்றாவது முறையாக சூர்யாவுடன் கைகோர்க்கும் டாப் நடிகை.. சூப்பர் ஜோடி

Share

மூன்றாவது முறையாக சூர்யாவுடன் கைகோர்க்கும் டாப் நடிகை.. சூப்பர் ஜோடி

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கங்குவா.

இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் வெளிவரவிருக்கும் திரைப்படம் சூர்யா 44. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறார்கள். இந்த நிலையில், இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, சூர்யாவின் 45வது படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. த்ரிஷா – சூர்யா இருவரும் இணைந்து மௌனம் பேசியதே மற்றும் ஆறு படங்களில் நடித்துள்ளனர். மேலும் மன்மதன் அம்பு படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு த்ரிஷாவுடன் சூர்யா நடனமாடி இருந்தார்.

மேலும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ள மாசாணி அம்மன் படத்திலும் த்ரிஷா தான் நடிக்கவிருந்தார் என தகவல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...