tamilnaadi 5 scaled
ஏனையவை

இன்றைய ராசி பலன் : 19 நவம்பர் 2024 – Daily Horoscope

Share

இன்றைய ராசிபலன் 19.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 4, செவ்வாய்க் கிழமை, சந்திரன் மிதுனம் ராசியில் சஞ்சரிக்கிறார். விருச்சிகம் ராசியில் உள்ள அனுசம், கேட்டை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில் துறையில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல் தொடர்புடையவர்களுக்கு தொண்டர்களின் ஆதரவு பெருகும். குடும்பத்தில் சிலருடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களின் பேச்சில் இனிமையை கடைப்பிடிக்கவும். பணியிடத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பணியிடத்தில் பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். இன்று சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஷயங்கள் நடக்கும். வாழ்க்கை துணைவியால் நிதிநிலை மேம்படும். இன்று உங்களின் கடனை திரும்பி செலுத்த வாய்ப்புள்ளது. உங்கள் செயலில் நிச்சய வெற்றி எதிர்பார்க்கலாம். தாயின் உடல் நலனில் அக்கறை தேவை.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று சில பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியது இருக்கும். பணியிடத்தில் வேலையை முடிப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படவும். வாழ்க்கை துணையுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பிள்ளைகளின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்களிடமிருந்து சில நல்ல செய்திகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் இருந்த தடைகள் நீங்கும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கையில் சில திடீர் மாற்றங்கள் மனக்கவலையை தரும். இன்று மனதளவில் பலவீனமாக இருப்பீர்கள். இன்று நீங்கள் எதிர்பார்த்த கடன் எளிதாக கிடைக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்லவும். திருமணத்தில் துணையின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படவும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய தொழிலில் லாபத்தை எதிர்பார்க்கலாம்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சில உறவினர்கள் மூலம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இன்று நண்பர்கள் கூட எதிரிகளாக மாற வாய்ப்புள்ளது. உங்கள் வணிகத்தில் எந்த செயலிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல சலுகைகளை பெறலாம். ஆன்மீக நிகழ்வுகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் திட்டங்கள் சிறப்பாக நிறைவேறும். உங்களின் ஆற்றலும், வீரமும் அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவால் சிறப்பான வெற்றியை பெறலாம். இன்று உறவினர்களுக்கு உதவ முன் வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் திட்டமிட்ட அனைத்து வேலைகளும் சிறப்பாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். உங்கள் போட்டியாளர்களை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் வேலையில் சிறப்பான வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும். சட்ட விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய முதலீடு, சொத்து வாங்கும் முயற்சியில் கவனமாக செயல்படவும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பணம் தொடர்பான நடவடிக்கைகளில் கவனமும், அனுபவசாளிகளின் அழகினை பெறுவது நல்லது. வியாபாரம் தொடர்பாக முக்கிய வேலைகளை தள்ளிப்போட வேண்டாம். மாணவர்கள் போட்டி, கல்வி தொடர்பான விஷயத்தில் நல்ல வெற்றி உண்டாகும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வணிகத் திட்டங்களில் ஆதாயம் அடைவீர்கள்.. உங்களின் மரியாதை அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களின் புகழ் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் தொடர்பான முடிவுகள் எடுக்க நேரிடும். இன்று பணம் தொடர்பாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும். செலவுகளில் கூடுதல் கவனம் தேவை.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக விருப்பப்பட்ட சில வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். திருமண வாழ்க்கையில் நல்லிணக்கத்தை பேணுவது அவசியம். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தைகளின் கல்வி தொடர்பான அலைச்சல் ஏற்படும். பணியிடத்தில் மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அதிக செலவுகளால் சிரமப்படுவீர்கள். எந்த வேலையும் சிறப்பாக செய்து முடிக்க வாய்ப்பு உண்டு. இன்று பணிச்சுமையால் சோர்வாக இருப்பீர்கள். இந்த நாட்களாக நிலுவையில் உள்ள பணம் திரும்ப கிடைக்க வாய்ப்புள்ளது. இன்று ஆரோக்கியத்தில் தொந்தரவு ஏற்படும். குழந்தைகளின் செயல் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று மன அமைதி தரக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தை பெருக்க எடுக்கும் முயற்சிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். புதிய மூலங்களில் இருந்து பண வருவாய் கிடைக்கும். இன்று நிதிநிலை குறித்து கவலை ஏற்படும். பிள்ளைகளின் செயல் புகழை அதிகரிக்கும்.

Share
தொடர்புடையது
zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...