8 33
இலங்கைஏனையவைசெய்திகள்

மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

Share

மீண்டும் தரம் உயர்த்தப்பட்ட சிறிலங்கன் எயார்லைன்ஸ்!

குறைக்கப்பட்ட இலங்கை தேசிய விமான சேவையான சிறிலங்கன் விமான சேவையின் (Srilankan Airlines) பாதுகாப்பு மதிப்பீட்டை, உலகின் முன்னணி விமான தரமதிப்பீட்டு நிறுவனம் “Airline Ratings” மீண்டும் உயர்த்தியுள்ளது.

அந்த தரவரிசைகளை தரமிறக்குவதற்கு காரணமான சம்பவம் தொடர்பில் இலங்கை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தமையே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்ற சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் கேப்டன் ஒருவர் விமானி அறைக்குள் நுழைய அனுமதிக்க மறுத்த சம்பவத்தைத் தொடர்ந்து சிறிலங்கன் எயார்லைன்ஸின் பாதுகாப்பு மதிப்பீடு ஆறு நட்சத்திரங்களாகக் குறைக்கப்பட்டது.

விமானம் பறக்கும் போது துணை விமானி கழிவறைக்கு சென்று திரும்பிய போது, பிறகு கேப்டன் விமானி கதவை திறக்கவில்லை.

விமானி கழிவறைக்குள் நுழைந்ததும் கேப்டன் கதவை மூடிவிட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிறிலங்கன் எயார்லைன்ஸ், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...