ஏனையவை

இலங்கை – இந்திய மீனவர்கள் பேச்சுவார்த்தை

meeting 2
Share

இலங்கை – இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை ஆனான் நேற்று மாலை மூன்று மணியளவில் கச்சைதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை தந்த மீனவபிரதிநிகள் மற்றும் கட்சி சார் பிரதிநிகள் அமைச்சர் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.

இதனைதொடர்ந்து இந்திய மீனவ பிரதிநிதிகள் தரப்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகினை விடுத்து பிறதொழில்களுக்கு தம்மை அனுமதிக்க வேண்டும் எனவும் தமது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் மற்றும் மீனவர்களை மனித உரிமைசார் அடிப்படையில் கூலிக்காக வரும் அவர்களை கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் 20வருடங்களாக உங்களுடன் பேசி வருகின்றோம் எந்தவித பிரியோசனமும் இல்லை எங்கள் நிலைமைகளை புரிந்து கொள்ளுங்கள் ஆக இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எக்காரணம் கொண்டும் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைய விடமாட்டோம் என தெரிவித்தனர்.

இதே நிலையில் ஒரு மீனவர் எமக்குரிய தீர்வு ஒரு கிழமைக்குள் வழங்கபடாவிடில் அமைச்சரதும் துணைத்தூதுவரதும் காரியாலயத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்வோம் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இங்கு கலந்துரையாடபட்ட விடயங்கள் தொடரபாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாக தெரிவித்து கலந்துரையாடலை நிறைவுறுத்தினார்.

இதன் பொழுது இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மன்னார் , கிளிநொச்சி, யாழ் மாவட்ட நீரியல் வள திணைக்கள உதவி பணிப்பாளர்கள், வடமாகாண கடற்படை தளபதி அனுர தென்னகோன்,பா.ஜ.க தமிழக மீனவ தலைவர் எம்.சி முனுசாமி உட்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

#SriLanka #India

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...