3 23
இலங்கைஏனையவைசெய்திகள்

சிலிண்டரை கைவிட்ட பங்காளிகளால் உருவாகும் புதிய கூட்டணி

Share

சிலிண்டரை கைவிட்ட பங்காளிகளால் உருவாகும் புதிய கூட்டணி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) இருந்து விலகி, கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துறையாடல் நேற்றையதினம் (19.12.2024) சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் 28 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஊடகங்களுக்கு கருத்துரைத்த முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா, முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட தரப்பினர் விரைவில் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 176
செய்திகள்உலகம்

உலகளாவிய பொருளாதார நெருக்கடி: 80 பில்லியன் டொலர் நிதியுதவித் திட்டத்தை அறிவித்தார் அஜய் பங்கா!

நீடித்த உலகளாவிய பொருளாதார இடையூறுகள் மற்றும் விநியோகச் சங்கிலி பாதிப்புகளைச் சமாளிக்க நாடுகளுக்கு உதவும் நோக்கில்,...

world 175
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து 36,700 மெட்ரிக் டன் பெட்ரோல் வருகை: விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

இலங்கையின் உள்ளூர் எரிபொருள் விநியோகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 36,700 மெட்ரிக் டன் ஆக்டேன் 92...

world 174
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு போர்: உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்புகளைக் குறைக்கிறது சர்வதேச நாணய நிதியம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் உலகப் பொருளாதாரத்தின் வேகத்தைத் திடீரெனச் சீர்குலைத்துள்ளதால், வளர்ச்சி கணிப்புகளைக்...

world 173
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வேசும முதற்கட்ட பயனாளர்களுக்கு கொடுப்பனவு: மோசடியாளர்களுக்கு கடும் எச்சரிக்கை!

அஸ்வேசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளர்களுக்கான விபரங்களை மீளாய்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த பின்னர், எதிர்வரும்...