14 9
ஏனையவை

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

Share

நாடாளுமன்றம் செல்லும் நாமல்! பதவிப் பிரமாணம் குறித்து வெளியான தகவல்

2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna) தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராசபக்ச (Namal Rajapaksa) பதவிப் பிரமாணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) இன்றையதினம் (16.11.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய சாகர காரியவசம், “இந்த ஆணையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். எங்களிடம் மாவட்ட அளவில் 02 நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் தேசிய பட்டியலில் ஒரு நாடாளுமன்ற தவியும் உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்றது.

160 நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்து 196 பேர் நேரடியாகவும் 29 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

இந்த தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அகில இலங்கை ரீதியில் 141 ஆசனங்களை கைப்பற்றியதுடன், சிறிலங்கா பொதுஜன பெரமுன 31,201 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...