இலங்கை இராணுவ மயமாக்கலை நோக்கி பயணிக்கின்றது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது, நாடு இராணுவ மயமாக்கப்படுகிறதா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” ஓய்வுபெற்ற சில இராணுவ அதிகாரிகள் அரச பதவிகளை வகிப்பது ஒருபோதும் இராணுவமயமாக்கல் நடவடிக்கை அல்ல.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் பல வருடங்களாகப் பெற்றுக்கொண்ட தமது அறிவு மற்றும் அனுபவத்தைப் பயன்படுத்தி, நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை புரிவது ஒரு தவறான விடயமா என கேட்க விரும்புகின்றேன். ” – என்றார் .
அதேவேளை, நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
#SrilankaNews
Leave a comment