4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொவிட்!

covid vaccine new

4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டுபாயில் இருந்து கடந்த 12 நாட்களுக்கு முன் 30 வயது நிரம்பிய பெண் மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக இந்தியாவிற்குச் சென்றுள்ளார்.

குறித்த பெண் ஏற்கனவே இரு நாடுகளில் 02 வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் 4 டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.

ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான இடைவெளியில் குறித்த பெண் சீன தயாரிப்பான சினோபாம் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மத்தியபிரதேச மாநிலம் மஹவ் நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இந்தூரில் இருந்து விமானம் மூலம் துபாய் செல்லவதற்கு தயாராகியிருந்த இருந்தார்.

இந்தூர் விமான விமானத்தில் பயணிப்பதற்கு முன்னர் பயணிகளுக்கான கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அந்த பரிசோதனையில் 4 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட குறித்த 30 வயது நிரம்பிய பெண்ணுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த பெண்ணின் விமானப்பயணம் இரத்து செய்யப்பட்டு இந்தூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

#IndiaNews

Exit mobile version