5 27
ஏனையவை

ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து: நாடாளுமன்றில் வெளியான சுற்றறிக்கை

Share

புதிய நாடாளுமன்றம் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகளை ஒழுங்கமைக்க வேண்டியுள்ள நிலையில், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அனைத்து நாடாளுமன்ற ஊழியர்களினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் விசேட சுற்றறிக்கை ஒன்றை விடுத்துள்ள நாடாளுமன்றத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க, அந்த வாரத்தில் நாடாளுமன்ற ஊழியர்கள் கட்டாயம் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில், புதிய நாடாளுமன்றத்தை நிறுவுவதற்கான பூர்வாங்க பணிகளுக்கு நாடாளுமன்றத்தின் அனைத்து பிரிவுகளும் தயார்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் படி, இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

10 ஆவது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட செயலமர்வு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

அதன் போது, புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறை குறித்து விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

இதேவேளை, புதிய பாராளுமன்றத்திற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...