download 27 1 3
ஏனையவை

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையம்!

Share

ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை மையம்!

இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்தது.

மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் சரியாக காலை 11 மணிக்கு திறந்து வைத்தார். ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ விற்பனை மையம் இந்தியாவில் திறக்கப்பட இருப்பதை அறிந்து பலர் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்படும் முன்பே அங்கு கூடியிருந்தனர்.

ஆப்பிள் பிகேசியை திறந்து வைத்த டிம் குக் சுமார் ஏழு நிமிடங்கள் வரை வாயிலில் நின்றபடி வாடிக்கையாளர்களை ஸ்டோருக்கு வரவேற்றார். ஆப்பிள் பிகேசி திறப்பு விழாவில் உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய ஆப்பிள் ஸ்டோர்-ஐ திறந்து வைத்ததை அடுத்து டிம் குக் அங்கு கூடியிருந்த வாடிக்கையாளர்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார். மும்பையை தொடர்ந்து டெல்லியில் உருவாகி இருக்கும் மற்றொரு ஆப்பிள் சில்லறை விற்பனை மையம் ஏப்ரல் 20 ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது. டெல்லியை அடுத்த சிட்டிவாக் பகுதியில் உருவாகி இருக்கும் புதிய விற்பனை மையம் ஆப்பிள் சகெட் என்று அழைக்கப்படுகிறது.

#Technology

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...